சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைக்க எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சிகளும் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கூட்டணி அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை நீடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.