அரசாங்கம் தனது கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் பட்சத்தில் நாளை (22) முதல் உயர்தர வினாத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்கும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர்;
“.. ஆசிரியர்களின் பிரச்சினைக்கு நெகிழ்வான தீர்வொன்றை எட்டுவதற்கு கல்வி அமைச்சர் முயற்சித்து வரும் வேளையில் ஜனாதிபதி தன்னிச்சையாக தலையிட்டு ஆசிரியர்களை அச்சுறுத்துவதை கண்டிக்கிறோம்.
கல்வி அத்தியாவசிய சேவையாக இருப்பதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கல்விக்குத் தேவையான எந்த வசதிகளையும் செய்து கொடுக்காமல், அரசியல் நிகழ்ச்சி நிரலில் மட்டும் செயற்படுவதை இவ்வாறு அச்சுறுத்துவதை சங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜனாதிபதிக்கு நாங்கள் சவால் விடுகின்றோம்… முடிந்தால் எங்களின் சொத்துக்களை அரசாங்கத்திற்கு எடுத்துச் சென்று சிறையில் அடைத்துவிடுங்கள். எமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தி தற்காலிக தீர்வை வழங்கினால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்காக எந்த நேரத்திலும் இணைய தயாராக உள்ளோம்.
இந்தக் பிள்ளைகளால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதே எங்கள் குறிக்கோள். ஆனால் அதன் மீது பழி சுமத்துவது அரசுதான். இந்த வரி மசோதாவை முழுமையாக இரத்து செய்ய நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் சில சிறிய மாற்றங்களை மட்டுமே கேட்கிறேன்.
மேலும், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளோம். இவ்வாறு அச்சுறுத்தல்களை நாம் கவனத்தில் கொள்ளாமல் ஏற்றுக்கொள்ள முடியாது..”
முடிந்தால் பல்கலைக்கழக பேராசிரியர்களின் சொத்துக்களை சுவீகரிக்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுவதாக பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம தெரிவித்துள்ளார்.
“பல்கலைக்கழக விரிவுரையாளர்களை மாடுகளைப் போல் பயமுறுத்தி அவர்களிடம் வேலை வாங்க முடியாது. தற்போது 20,000 ரூபாய் சம்பளம் பெறாத விரிவுரையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். நான் பெறும் சம்பளம் எனது மருத்துவ சிகிச்சைக்கு கூட போதாது.”