கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது;
கல்வித் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவடைந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும் உயர்தர விடைத்தாள் பரீட்சை தொடர்பான பிரச்சினைக்கு அரசாங்கம் சாதகமான தீர்வை வழங்கவில்லை. இருந்த போதிலும் உயர்தர பரீட்சை விடைத்தாள்களை பரிசோதிக்காவிட்டால் கல்வி அத்தியாவசிய சேவையாக மாறும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
கல்வித்துறையின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒருபுறம் இருக்க, மக்கள் பலம் இன்றி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியின் இந்த ஜனநாயக விரோத அறிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
விடைத்தாள் மதிப்பீட்டிற்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை பரிந்துரைத்து அனுமதி பெற்ற போதிலும், ஜனாதிபதியின் கீழ் உள்ள திறைசேரி அந்த அமைச்சரவை பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கி இரண்டு மாதங்கள் கடந்தும், உயர்தர மாணவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜனாதிபதி, அதற்கு கல்வியே இன்றியமையாத சேவை என ஜனநாயக விரோத கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வேதனையான நிலையாகும்.
மேலும், உயர்தரப் பரீட்சையின் தரத்தை நிலைநிறுத்த, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, விடைத்தாள் மதிப்பீட்டைத் தொடங்குவது பாரதூரமான பிரச்சினையாகும்.
இந்நிலையில் அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதுடன் விடைத்தாள்களை சரிபார்க்கும் ஆசிரியர்களுக்கு போதிய கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டுகிறோம்.