எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் பழுப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதிக விலைக்கு முட்டைகளை எடை அடிப்படையில் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்தது, இதன்படி வெள்ளை முட்டை 44 ரூபாவாகவும் பழுப்பு நிற முட்டை 46 ரூபாவாகவும் இருந்தது.