இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக “தி இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.