எதிர்வரும் மே மாதம் முதல் அரை சொகுசு பஸ்களை இரத்து செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்க பெறுகின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரேன்டா தெரிவித்துள்ளார்.
“போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின்படி அரை சொகுசு சேவையை சாதாரண சேவையாகவும், சொகுசு சேவையாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, அனைத்து பஸ் உரிமையாளர்களும் தங்களது பஸ்களை சாதாரண சேவையாகவோ அல்லது சொகுசு சேவையாகவோ மாற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஏதும் வசூலிக்காமல் செய்து வருகிறோம். தற்போது 430 பஸ்கள் உள்ளன. இவ்வாறு சேவை திருத்தம் கோரி சுமார் 20 பஸ்களுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மே மாதம் 31ம் திகதி வரை சேவை திருத்தம் மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்தார்.