பதுளை – தல்தென பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து ஒன்பது கைதிகள் இன்று (17) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், அவர்களில் இருவரை சிறை அதிகாரிகள் பின்னர் கைது செய்தனர்.
காணாமல் போன கைதிகளை கண்டுபிடித்து தடுத்து வைப்பதற்காக இலங்கை பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.