சாரதிகள் பணிக்கு வாரமையினால் 4 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனிவெளி மற்றும் கரையோரப் பாதையில் சேவையில் ஈடுபடும் 4 ரயில்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டதாக அதன் துணைப் பொது மேலாளர் தெரிவித்தார்.
சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் நேற்று (16) 30க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.