நாளை(17) பாடசாலை விடுமுறை குறித்து பரவிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (17) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியை கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் நிராகரித்துள்ளார்.
நாளை(17) வழமைபோல அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.