புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்றும்(16) விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளன
இன்று (16) மற்றும் (17) பல விசேட புகையிரத பயணங்கள் செயற்படுவதாக ரயில்வே துணைப் பொது மேலாளர் தெரிவித்தார்.
விசேடமாக பெலியத்த, பதுளை, காலி போன்ற பகுதிகளில் இருந்து கொழும்பு கோட்டை வரை சேவையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.
அம்பாறை, திருகோணமலை, ஹட்டன், பதுளை, அனுராதபுரம், மன்னார், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் தங்காலை போன்ற பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு வருவதற்கு சுமார் 900 பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.