follow the truth

follow the truth

January, 17, 2025
HomeTOP3பொருளாதார நெருக்கடி - இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஆசிய அபிவிருத்தி வங்கி அவதானம்

பொருளாதார நெருக்கடி – இலங்கைக்கு ஆதரவளிப்பதில் ஆசிய அபிவிருத்தி வங்கி அவதானம்

Published on

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

சலுகை நிதிய முறையின் கீழ் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது இந்த வருடத்துக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்களில் ஒன்று என ப்ளூம்பெர்கிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையில் உள்ள அதன் வதிவிடப் பணிப்பாளர் சென் சென் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில், வங்கி, எரிசக்தி மற்றும் கல்வித் துறைகளுக்கு உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டுள்ளது.

மின்சாரதுறையின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டம் தொடர்பில் ஜனவரி 21 – 22 விவாதம்

பாராளுமன்றம் ஜனவரி 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்...

நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மின்கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு...