follow the truth

follow the truth

January, 17, 2025
HomeTOP2புலனாய்வு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில்

புலனாய்வு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில்

Published on

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதற்காக பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொது மக்களின் பாதுகாப்பு கருதி நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் சாதாரண உடையில் இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் சித்திரை புத்தாண்டு விசேட விழாக்களை ஏற்பாடு செய்பவர்கள் அதில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவற்றை பொலிஸ் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷ நாணயக்கார கைதினை தடுக்க முன்பிணை கோரி மனுத்தாக்கல்

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் கைது செய்யப்படுவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக முன்பிணை கோரி கொழும்பு நீதவான்...

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று (17) பிணையில் விடுவிக்க நுகேகொட நீதவான் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி,...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID இற்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோதமாக சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கதிர்காமம்...