பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணிக்கவிருந்த ‘ரஜரட்ட ரெஜின’ ரயிலின் இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (11) பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தாமதமாக சென்றதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த இயந்திரத்திற்கு பதிலாக வேறு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.