ஜோர்ஜிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஜோர்ஜிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் அரசாங்கம் அரசியல் எதிரிகளை சிறையில் அடைப்பதாகவும், சுதந்திர ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜோர்ஜியாவின் முன்னாள் ஜனாதிபதி மிகைல் சகாஷ்விலிக்கு ஆதரவாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியினால் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.