கடன் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் சர்வதேச பங்காளிகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை நம்புவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாளை (10) வாஷிங்டனில் நடைபெறவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான விசேட சந்திப்பில் அதற்கான சிறந்த சந்தர்ப்பம் அமையும் என இராஜாங்க அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Looking forward to representing #SriLanka at the #IMF #WorldBank #2023SpringMeetings starting 10th April . Great opportunity to enhance cooperation with our international partners to ensure debt sustainability & to further the progress we have made towards economic recovery. pic.twitter.com/igirXZl9nm
— Shehan Semasinghe (@ShehanSema) April 9, 2023
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இணைய உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் அது தொடர்பான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.