follow the truth

follow the truth

November, 26, 2024
HomeTOP1'நொச்சிமுனை தர்ஹா - சகவாழ்வின் கடைசிக் கோட்டை' ஆவணப்படம்

‘நொச்சிமுனை தர்ஹா – சகவாழ்வின் கடைசிக் கோட்டை’ ஆவணப்படம்

Published on

மட்டக்களப்பு கல்லடி-உப்போடை நொச்சிமுனையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான உறவினையும்1985 கலவர காலத்தின் போது நிகழ்ந்த முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படம் ‘நொச்சிமுனை தர்ஹா – சகவாழ்வின் கடைசிக் கோட்டை’யின் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து, இம்மாதம் பொதுமக்களுக்காகக் காண்பிக்கப்படவுள்ளது.

எழுத்தாளரும் ஊடக, சமூக செயற்பாட்டாளருமான ஆத்மா ஜாபிர் இதனை எழுதி இயக்கியுள்ளார். ஏறத்தாழ 30 நிமிட கால அளவுள்ள இவ் ஆவணத் திரைப்படம், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அவர் முன்னெடுத்த ஆராய்ச்சி, தேடல், உழைப்பின் அறுவடையாகும்.

இவ் இலவச திரைப்படக் காட்சி குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ் ஆவணப்படத்தின் first look poster, trailer ஆகியவை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஆத்மா ஜாபிர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்துறை விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nochchimunai Dharga – the final fort of co-existence

Documentary film

Written and directed by
Aathmaa Jafir

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சை 3 நாட்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள்...

வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை குறிப்பிட்ட திகதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல்...

உள்நாட்டு இறைவரி திணைக்களம் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது

அனைத்து பிரதான அலுவலகங்களும், அனைத்து பிராந்திய மற்றும் நகர அலுவலகங்களும் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படும் என உள்நாட்டு இறைவரி...