இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
டெல்லி கெப்பிடல்ஸுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி கெப்பிடல்ஸ் நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பினை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது. ஜோஸ் பட்லர் 79 ஓட்டங்கள். யசஸ்வி ஜெய்ஷ்வால் 31 பந்துகளில் 60 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் முகேஷ் குமார் 36 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பதில் இன்னிங்சை விளையாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் வார்னர் 65 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் யுஷ்வேந்திர சாஹல் 27 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், டாரன்ட் போல்ட் 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகன் விருதை யாசஸ்வி ஜெய்ஷ்வால் பெற்றார்.