இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரண்டாவது தொகுதி முட்டைகள் இன்று (08) பேக்கரிகளுக்கு வெளியிடப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த முட்டைகளின் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையால் இன்று வழங்கப்பட உள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
கடந்த 29ஆம் திகதி ஒரு மில்லியன் முட்டைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.