மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மின் பாவனையில் குறைவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் சிஸ்டம் கட்டுப்பாட்டு அலகின் தரவு விளக்கப்படத்தை முன்வைத்த அவர், மார்ச் மாதத்திற்கான சராசரி மின்சார உற்பத்தி 44.22 ஜிகாவாட் மணிநேரம் என சுட்டிக்காட்டினார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் எரிசக்தி தேவை குறையும் பட்சத்தில் சராசரி மின் உற்பத்தி 40.5 ஜிகாவாட் மணிநேரமாக குறையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, ஊடகங்கள் ஊகித்து வருவதற்கு மாறாக மின்சாரத் தேவைக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என அமைச்சர் தனது டுவிட்டரில் மேலும் தெரிவித்துள்ளார்.