பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.