follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுசுகாதார வழிகாட்டல்களில் மேலும் சில தளர்வு

சுகாதார வழிகாட்டல்களில் மேலும் சில தளர்வு

Published on

புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (15) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மண்டபவங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண மண்டபத்தில், மதுபான பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து திருமணங்களும் பதிவு திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும்.

அத்துடன் மரண சடங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளை முதல் 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உணவகங்களில், இருக்கை திறனுக்கமைய, 30 சதவீதம் வரை, மக்களை உணவருந்த இடமளிக்கலாம். ஆனால் மதுபானம் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை, அதிகபட்சம் 50 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு மண்டபத்தில் நடத்தலாம்.

அத்துடன் சில விளையாட்டு நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...