இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது இலங்கையின் பானுக ராஜபக்ஷ காயம் அடைந்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் 03ம் இலக்க துடுப்பாட்ட வீரராக களம் இறங்கிய பானுக ராஜபக்ஷ ஒரு பந்தை மாத்திரமே எதிர்கொள்ள முடிந்தது. மறுமுனையில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஷிகர் தவான் அடித்த ஷாட் பானுகவின் கையில் பட்டது.
அதன்படி களத்தை விட்டு வெளியேறிய அவர் மீண்டும் துடுப்பாட்டத்திற்கு வரவில்லை. எவ்வாறாயினும், அவரது காயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 05 ஓட்டங்களால் தோற்கடித்து பஞ்சாப் கிங்ஸ் அணி வலுவான வெற்றியைப் பெற்றது.