தனியார் பேருந்து துறையை மீண்டும் ஊக்கப்படுத்துவதற்காக சலுகை நிவாரணம் ஒன்றை வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சலுகை நிவாரணம் ஒன்றை வழங்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பேருந்து தொழிற்துறை சார்ந்த 6 தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.