இலங்கையின்பொருளாதாரம் 2023 இல் வீழ்ச்சியடைந்த பின்னரே மீண்டும் 2024 இல் வளர்ச்சி பாதையைநோக்கி செல்லும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
2022 இல் 7 வீதமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மூன்று வீதத்தினால் வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் உயர்ந்துள்ள நிதித் துறையின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்ற அரசியல் நிலைமை என்பன நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதாக உலக வங்கி தெரிவிக்கிறது.
இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உலக வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது.