இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய நிக் போதஸ், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக இரண்டு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் முதல், பங்களாதேஷ் அணியின் துணை பயிற்சியாளராக பணிபுரிய தொடங்குகிறார். தற்போது ஹெம்ப்ஷயர் அணியின் கோல்கீப்பர் பயிற்சியாளராக உள்ளார்.
பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹதுருசிங்கவும், சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தும் பணியாற்றி வருகின்றனர்.