அனைத்துத் தொலைபேசி பாவனையாளர்களுக்கும், தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு (Number Portability) சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவில் இன்று இடம்பெற்று ஊடகவியலாளா் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.