பொருளாதார உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எஃப்) அணுக வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (14)
மீண்டும் வலியுறுத்தினார்.
எங்களுடைய கடன்களை நாங்கள் திருப்பிச் செலுத்துவோம். எனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு
இல்லை என்று குறிப்பிட்டார்
அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் உட்பட பல வெளிநாட்டு வரவுகள் இலங்கையின் பொருளாதார நிலைமைகளுக்கு உதவும் என்று
எதிர்பார்க்கப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
இலங்கையின் சுற்றுலாத் துறையும் இந்த டிசம்பர் மாதத்திற்குள் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கப்ரால் மேலும் கூறினார்.
இதற்கிடையில், மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி விகிதத்தை முறையே 5.00 சதவீதம்
மற்றும் 6.00 சதவீதமாக பராமரிக்க நாணய வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்