கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் குழு இன்று (01) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரைச் சந்தித்து நிலைமைகளை அறிவிக்கவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட 20 ஊழியர்களிடம் எதிர்வரும் திங்கட்கிழமை ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.