உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
அன்றைய தினம் தேர்தலை நடத்துவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எட்டப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.