தமது பாடசாலையின் “பிக் மேட்ச்” போட்டிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீதிக் கண்காட்சியின் போது, பதுளையில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 ஆம் தரம் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஜீப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.