சர்வதேச நாணய நிதியம் கூறிய பல முக்கிய உண்மைகளை புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் விற்பனை பற்றி மாத்திரம் பேசுவதாக 43வது படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
43வது படையணி இன்று (31) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அரச நிறுவனங்களை எவ்வாறு இலாபம் ஈட்டுவது என்பதை தாம் அமைச்சராக இருந்த காலத்தில் காட்டியுள்ளேன் எனத் தெரிவித்த உறுப்பினர், அரச தொழில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமாயின், மிகவும் வலுவான ஒழுங்குமுறைச் செயற்பாடுகள் தேவை என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அது என்ன செய்யப் போகிறது என்பது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.