நாட்டிற்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்கள் தமது உரிமைகளுக்காக நிற்கின்றனவா, நாட்டு மக்களின் உரிமைகளுக்காக நிற்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கட்சி என்ற ரீதியில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.