அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி (Manhattan Grand Jury) குற்றம் சாட்டியுள்ளது.
பிரபல நீலப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுடன் சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளார்.
சிஎன்என் செய்திகளின்படி, டிரம்ப் மீது சுமார் 30 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகள் இன்னும் வெளிவராத பின்னணியில் 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்காக டிரம்ப் பிரச்சாரம் செய்கிறார்.
இருப்பினும், குற்றச்சாட்டுகளுடன், டிரம்ப் பதவியில் இருக்கும் போது – அல்லது அதற்குப் பிறகு கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சில அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் இணைகிறார்.
இதனிடையே கடந்த 18ம் திகதி தன்னை கைது செய்ய முயற்சி நடப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.