விவசாயிகளுக்காக QR குறியீடு முறைமை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த QR முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறமுடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
உரப்பிரச்சினையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடமும் உரங்களுக்கு மேலதிகமாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.