உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை வழங்கத் தவறிய நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் படி செயற்படாததற்காக சில முக்கிய ஆவணங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.
நிதி அமைச்சரின் செயலாளருக்கு எதிராக இரண்டு நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.