எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ. 80 என கட்டணம் அறவிடப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.