இன்று காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையான மூன்று மணித்தியாலங்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக நிலையங்களில் இருந்து 208 எரிபொருள் பவுசர்கள் விடுவிக்கப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அதன்படி, 6,600 லீட்டர் ஒக்டேன் 92 கொள்ளளவு கொண்ட 122 பவுசர்களும், 6,600 லீட்டர் லங்கா ஆட்டோ டீசல் கொள்ளளவு கொண்ட 86 பவுசர்களும், விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.