கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதற்கு பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும், நாட்டில் போதியளவு எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஏப்ரலில் விலை மாற்றத்தை எதிர்பார்த்து சில பெட்ரோல் நிலையங்கள் ஆர்டர் செய்யவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
எரிபொருள் நிரப்பு நிலைய நடத்துனர்கள் தமது ஆர்டர்களை வழங்குமாறும் தேவையான குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.