இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டை விநியோகம் இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.
விநியோக நடவடிக்கைகள் இன்று மாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்வேறு சட்டரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு முட்டை ரூ.35க்கு விற்கப்படும்.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை 90 நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்க முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.