பெட்ரோலியக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கொலன்னாவ பெட்ரோலிய முனைய வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை (CPC) தனியார் மயமாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக நேற்று (மார்ச் 27) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, இது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் தொழிற்சங்க கூட்டுக்குழுவின் விசேட கலந்துரையாடலொன்று இன்று (மார்ச் 28) நடைபெறவிருந்தது.