வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாட்டில் உள்ளதை கருத்திற்கொண்டு, ஊடகத்துறையின் பதில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.