இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்தினால் திருகோணமலை சம்பூரில் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சம்பூர் அனல் நிலையம் நிர்மாணிக்கப்படவிருந்த அதே இடத்தில் 135 மெகாவோட் சூரிய சக்தி திட்டத்தை 2 கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.