அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க சம்பளத்தை உயர்த்துமாறு கோரி ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் ஆகிய போக்குவரத்துக் கட்டமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் 24 மணி நேரத்துக்கு வேலைகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதனால் 380,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
.