முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவப் பிரதானியாக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் தேசிய பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட குழுவின் அறிக்கையில், சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஷவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ணகொட குழு அறிக்கையில் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மே 09ஆம் திகதி வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக விரைவில் விசேட கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியாக பொதுஜன பெரமுன செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.