தேர்தல் ஆணைக்குழு கூட்டம் அடுத்த மாதம் 04ம் திகதி நடைபெற உள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கடந்த வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (28) ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், அது குறித்த திகதிகளில் நடைபெறாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.