அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சர்வாதிகார போக்கிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை பறித்து மக்களின் வாக்குரிமையை உதைக்கும் அரசாங்கத்தின் சர்வாதிகார வேலைத்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், நீதித்துறை, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் சர்வதேச சமூகம் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம் தேர்தலை புறக்கணித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
காலாவதியான உள்ளுராட்சி மன்றங்களுக்கான உப குழுக்களை நியமித்து அதற்கான அரச உதவியாளர்களை நியமிக்க ஜனாதிபதி தலைமையிலான பொஹொட்டுவ அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.