எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்தில் 1,400 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷானி தாபரே தெரிவித்தார்.
வயல், சதுப்பு நிலங்கள், வண்டல் நிலங்கள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.