தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
ஆனால் நடக்காத இந்த தேறுதலுக்கு இதுவரை செலவிக்கப்பட்டுள்ள கோடி ரூபாய்கள் தொடர்பான வெளிக்கொணர்வே இது.
2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பீ.பீ.சி செய்தி நிறுவனம் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் வினவிய நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை ஆணைக்குழு அவர்களுக்கு அனுப்பியுள்ளது.
அதன் படி 2023 பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரைக்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 131 மில்லியனருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. கொஞ்சம் தெளிவாக சொன்னால் 1 கோடி 31 இலட்சத்துக்கும் அதிகம்.
2023 ஆம் பெப்ரவரி மாதம் இறுதி வரையில் நிதி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 127 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.
2023 பிரதேச சபை தேர்தலுக்கான செலவு சுமார் 9326 மில்லியன் ரூபாய்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 9.3 பில்லியன் ரூபாய்கள் ஆகும்.
எவ்வாறாயினும் இந்த தேர்தலை பிற்போட அரசாங்கம் 30 மேற்பட்ட தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக “பெப்பரல்” அமைப்பு கூறியுள்ளது.
2023 ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலுக்காக கணக்கிடப்பட்டுள்ள செலவுகள் சுருக்கமாக…
தபால் மூல வாக்களிப்புக்கான திகதியில் மீண்டும் மாற்றம்
2023 பிரதேச சபைகளுக்கான தேர்தலில் தபால் மூல வாக்களிப்புகள் குறிப்பிட்ட திகதியில் நடக்காது என தேர்தல்கள் ஆணைக்குழு (மார்ச் 23) அறிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் பொழுது ஆணைக்குழு தலைவர் இதனை அறிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 28,29,30,31 ஆகிய திகதிகளில் நடக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆணைக்குழு அறிவிப்பின் படி இந்த நாட்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறாது.
340 உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி இனிமேல் யார் கையில்?
காலி மாவட்ட எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தவிர்ந்த ஏனைய 340 சபைகளின் அதிகாரம் உறுப்பினர்களிடம் இருந்து கை நழுவி விஷேட ஆணையாளர்களின் கைகளுக்கு சென்றுள்ளது.
அதன் படி 29 மாநகர சபைகளின் அதிகாரம் நகர ஆணையாளரின் கைக்கும் 36 நகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த அந்த நிறுவன செயலாளர்களின் அதிகாரத்திற்கு கீழும் வந்துள்ளது.
குறித்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி பகல் 12 மணிவரைக்கும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கு 8000 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தேர்தலில் போட்டியிட அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தாலும் தேர்தல் நடக்காத காரணத்தால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
நன்றி – பீ.பீ.சி – சிங்கள சேவை