அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் பேரூந்து உதிரி பாகங்களின் விலை மற்றும் சேவைக் கட்டணங்கள் குறைவடைந்துள்ளமை குறித்து விசாரணை நடத்த முடியாவிட்டால் போக்குவரத்து அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
விசேட குழுவொன்றை நியமித்து அமைச்சர் அதனைச் செய்ய முடியும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவால் தனியான குழுவொன்றை நியமிக்கவோ அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவோ முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் எனவும் வேறு ஒருவரை நியமித்து பிரச்சினைகளை ஆராய வேண்டும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.