உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோற்றவுள்ள அரச ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் காலத்தில் சம்பளம் வழங்கப்படாமையால் அந்த அரச உத்தியோகத்தர்களுக்கு தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களிலும், இவ்வாறான தேர்தல்களில் சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்ட போது, அரச ஊழியர் வேட்பாளர்களின் சம்பளம் மற்றும் கடமைகளை ஈடு செய்வது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இம்முறை தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.